Sunday, August 26, 2007

அன்றுதான் யாழ்மக்களும் இடம்பெயர்ந்தார்கள் II

(இது நான் சிறுவனாக (10 வயது) இருக்கும்போது நடந்தது. இது எனக்கு ஏற்பட்ட அனுபவமும் நான் பார்த்த சம்பவங்களுமே)


ஆமி வாறான் ஓடுங்கோ என்று அறிவத்தவுடன் மக்கள் எல்லோரும் பெட்டிகளுடன் றோட்டுக்கு வந்து விட்டார்கள். கே.கே.ஸ் றோட்டுமுழுக்க சனம் சின்ன டோச் லைட்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். எனது சின்ன சைக்கிளில் எமது சூட்கேஸ்களுடன் எனது குடும்பத்துடன் கே.கே.ஸ் றோட்டுக்கு வந்தோம். என்கோ அப்போது வயது 10, எங்கே போவது என்று தெரியாது, சாவகச்சேரிதான் போகவேண்டும் தெரியும் ஆனால் போகத்தெரியாது, பயத்தினால் அழுகைதான் வந்தது. நான் தடுமாறுவதை பார்த்த அம்மா ' தம்பி முன்னால பெரியப்பா சைக்கிள உருட்டிக்கொன்று போறார், அவருக்கு பின்னால போங்கோ, நான் பின்னலா தங்கச்சிகளுடனும் பெரியம்மாவுடனும் வாறன்'. இதைக்கேட்ட பின்புதான் பக் பக் என்று அடித்துக்கொண்டிருந்த எனது இதயத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தது.

கொஞ்சநேரத்தில் கண் இருட்டுக்கு பழகிவட்டதால் முன்னால் போய்கொண்டிருந்த பெரியப்பாவை என்னால் பார்க்க முடிந்தது. நல்லூர்வரை உற்சாகமாய் சைக்கிளை உருட்டிக்கொண்டிருந்த என்னை பெரியப்பா பிடித்து நிறுத்தினார், காரணம் தெரியாமல் யோசித்த நான் வானத்தை பார்த்ததும் புரிந்து கொண்டேன். வழமைபோல் நட்சத்திரங்களுடன் இல்லாமல் வானம் கரும்கறுப்பாய் காட்சியளித்தது. பெரியப்பா நல்லூரடியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிலிருந்து இரவை கழித்துவிட்டு நாளை சொல்லலாம் என்றதால் அங்கு சென்றோம். நாம் அங்கு செல்லவும் மழை கொட்டத்தொடங்கவும் சரியாகவும் இருந்தது. அன்றுதான் பூமித்தாயும் தனது கோபத்தை காட்டினாள்.

சிறிது நேரத்தில் ஆமி அடித்த சில ஷல்கள் பக்கத்தில் விழுவதுபோல் கேட்டன. அந்த சத்தத்தின் மத்தியிலும் கண்களை முடிய நான் யாரோ கூப்பிடும் சத்தத்தை கேட்டு கண் திறந்து பார்த்தால் பொழுது விடிந்திருந்தது. திரும்பி வீடு செல்வதாக ஏற்கனவே பெரியவர்கள் முடிவு செய்து விட்டதால் வீடு திரும்பினோம். இரண்டு நாட்களுக்குப்பின்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு சாவகச்சேரிக்கு தப்பி சென்றோம்.

முற்றும்
ஆறு

Labels:

14 Comments:

Blogger கானா பிரபா said...

முடிந்தால் இன்னும் சற்றி விரிவாக இதை எழுதுங்கோ, காலா காலத்துக்கும் இந்நினைவுப் பதிவுகள் தேவை

August 26, 2007 at 4:11 PM  
Blogger துளசி கோபால் said...

மனசுக்கு நிறைய வருத்தம் தரும் நிகழ்வுகள்(-:

ஆமா.......... எதுக்கு இந்த 'முற்றும்'?

துன்பத்திற்கான முடிவா?

August 26, 2007 at 4:13 PM  
Blogger Unknown said...

கானா பிரபா விரிவாக எழுத முயற்சி செய்கின்றேன்.
துளசியக்கா எங்களது துயரம் ஓய்வதற்கு பல நாட்கள் இருக்கின்றன. நான் எழுதிய சம்பவம் நடந்து 12 வருடங்களாகி விட்டது. ஆனாலும் நாங்கள் அந்த சம்பவங்களை மறக்ககூடாது.

August 26, 2007 at 4:33 PM  
Blogger வெற்றி said...

ம்ம்ம்...
கானா பிரபா சொன்னது போல கொஞ்சம் விரிவாக எழுதலாமே!

எனக்கு இந்த இடப்பெயர்வு அனுபங்கள் இல்லை. ஆனால் எமது ஊர் மக்கள் 1993ல் இடம் பெயர்ந்தனராம். அன்றிலிருந்து இன்று வரை ஊரின் எமது பகுதி உயர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டு மக்கள் குடியிருக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

ஊரின் எமது பகுதியில் பெரிய புத்த விகாரை கட்டியுள்ளனர் சிங்களப்படைகள்.

August 26, 2007 at 6:14 PM  
Blogger aaru said...

நன்றி வெற்றி. நிச்சயமாக எழுத முயற்சிக்கின்றேன். எங்கடை ஊரில் இருந்து கொண்டு சிங்களவன் செய்கின்ற அநியாயத்தை பார்த்தால் யாருக்குத்தான் கோபம் வராது. சிங்களவன் என்பது ஆட்சியில் இருக்கும் அரக்கர்களும், எங்களை அழிக்கும் ராணுவமும்.

August 26, 2007 at 7:50 PM  
Blogger Haran said...

நண்பரே,
தொடர்ந்தும் உங்களுடைய அனுபவங்களை அனைவருடனும் பகிருங்கள். எனது அனுபவங்களை நான் பகிர்ந்து வருகின்றேன், எனினும் சில வேளைகளில் மனம் கனத்துத் தொடர்ந்து எழுத முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனினும் நாம் தளர்ந்து விடக்கூடாது என்பது எனது கருத்து... தொடர்ந்தும் எழுதுங்கள்.

August 26, 2007 at 7:53 PM  
Anonymous Anonymous said...

நண்பர் ஆறு அவர்களே, நீங்கள் சொல்வதுமாதிரி சிங்களவனுடன் இருக்கப்பிரச்சனையென்றால், 1995 ஆண்டு சாகவச்சேரிக்கு வந்த பெரும்பாலான யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் திரும்பியேன் யாழ்ப்பாணம் போனார்கள்?
இலங்கை இராணுவத்திற்குப் பயந்து சாகவச்சேரிவரை வந்தவர்கள், சாகவச்சேரிக்கு இலங்கை இராணுவம் வந்தவுடன் வன்னிக்கல்லவா தொடர்ந்து ஓடியிருக்க வேண்டும்?
யாழ்ப்பாணத்திலுள்ள 40 ஆயிரம் இலங்கை இராணுவத்துடன் 2004 ஆண்டு யுத்தநிறுத்தம் வரும்வரைக்கும் யாழ்ப்பாணத்து மக்கள் ஓரளவு நிம்மதியுடனே வாழ்ந்து வந்தார்கள். 2004 ஆண்டு யுத்தநிறுத்தத்தின் பிரகாரம் யாழ்ப்பாணத்திற்கு வந்த புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்களின் பின்னரே யாழ்ப்பாணத்து மக்கள் இப்போது நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றார்கள். இதனை உங்களால் மறுக்க முடியுமா?
-செ.குணரத்தினம்-

August 27, 2007 at 1:24 PM  
Blogger aaru said...

நன்றி கரன். இப்பொழுதுதான் எழுத தொடங்கியிருக்கின்றேன் முடிந்தவரை எழுத முயற்சிக்கின்றேன்.

August 27, 2007 at 4:15 PM  
Blogger aaru said...

வணக்கம் செ.குணரத்தினம், நான் நினைக்கின்றேன் மக்கள் யாழ்பாணம் திரும்பி வந்ததிற்கு காரணம் இனியும் இடம் பெயரவேண்டாம் என்பதற்காகவே. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்ற பழமொழி உங்களுக்கு தெரியும்தானே?

'40 ஆயிரம் இலங்கை இராணுவத்துடன் 2004 ஆண்டு யுத்தநிறுத்தம் வரும்வரைக்கும் யாழ்ப்பாணத்து மக்கள் ஓரளவு நிம்மதியுடனே வாழ்ந்து வந்தார்கள்'

இதில் எனக்கு உடன்பாடில்லை. நான் அங்கிருக்கும் பொழுது யாழ்பாணம் மாலை 6 மணிக்குள் அடங்கிவிடும். அடிக்கடி சுற்றிவளைப்பு, பள்ளிக்கூடம் ஓழுகாக போகமுடியாது. சுண்டுகுளி பாடசாலை மாணவி கற்பழித்துக்கொலை, தேடிப்போன தாய் மற்றும் அயல் வீட்டுக்காரர் சித்திரவசை செய்யப்பட்டுக்கொலை, இதுவெல்லாம் ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடந்தது. எனது பக்கத்து வீட்டு அண்ணை ஒரு மதியம் படக்கசற் எடுக்க சென்றபொழுது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது எல்லாம் சின்ன சாம்பிள், அந்த நேரம் வந்த உதயன் பத்திரிகை எடுத்துப்பாருங்கள் அப்பதான் தெரியும் மக்கள் படுகின்ற கஸ்ரம்.

August 27, 2007 at 4:41 PM  
Blogger குழைக்காட்டான் said...

//நண்பர் ஆறு அவர்களே, நீங்கள் சொல்வதுமாதிரி சிங்களவனுடன் இருக்கப்பிரச்சனையென்றால், 1995 ஆண்டு சாகவச்சேரிக்கு வந்த பெரும்பாலான யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் திரும்பியேன் யாழ்ப்பாணம் போனார்கள்?
இலங்கை இராணுவத்திற்குப் பயந்து சாகவச்சேரிவரை வந்தவர்கள், சாகவச்சேரிக்கு இலங்கை இராணுவம் வந்தவுடன் வன்னிக்கல்லவா தொடர்ந்து ஓடியிருக்க வேண்டும்?
யாழ்ப்பாணத்திலுள்ள 40 ஆயிரம் இலங்கை இராணுவத்துடன் 2004 ஆண்டு யுத்தநிறுத்தம் வரும்வரைக்கும் யாழ்ப்பாணத்து மக்கள் ஓரளவு நிம்மதியுடனே வாழ்ந்து வந்தார்கள். 2004 ஆண்டு யுத்தநிறுத்தத்தின் பிரகாரம் யாழ்ப்பாணத்திற்கு வந்த புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்களின் பின்னரே யாழ்ப்பாணத்து மக்கள் இப்போது நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றார்கள். இதனை உங்களால் மறுக்க முடியுமா?
-செ.குணரத்தினம்-//


குணரத்தினம் ஐயா வணக்கம்
முழுமையான உடல் நலத்துடன் ஈழம் பற்றிய அனைத்து செய்திகளையும் வாசித்திருக்கிறீர்களா அல்லது கோமா நிலையில் இருந்து விழித்தெழுந்து மேலே உள்ள கருத்தை எழுதினீர்களா

நல்ல ஒரு கேள்வி கேட்டீர்கள்
ஏன் மக்கள் அனைவரும் வன்னி செல்லவில்லை? சாவகச்சேரிக்கு இராணுவம் வர வன்னி போய் இருக்கலாமே என்று?


(நீங்கள் யாழ்ப்பாணம், மற்றும் வன்னியின் புவியியல் அமைப்பை, தெரிந்தவர்,அப்போதைய இராணுவ நிலைகளை தெரிந்தவர் என வைத்து தான் எழுதுகிறேன்- ஆனால் உங்கள் கேள்வி தெரிந்தவர் போல் இல்லை என்பது வேறு விடயம்)
1. அப்போது சாவகச்சேரி வலிகாமத்து மக்களையும் கொண்ட மிக சன அடர்த்தியான இடம்
2. இராணுவம் எந்த எதிர்ப்பும் இன்றி முன்னேறிய்யது
3. எதிர்ப்பு இருந்திருன்ந்தால் மக்கள் பலர் இறந்திருப்பர்

4. வலிக்காமம் மக்கள் தென்மராட்சிப்பகுதிக்கு இடம்பெயரும் போது குறைந்தது 3 தரைவழி பாதைகள்/ தெருக்கள் இருந்தன. 4 ஆவதாக வடமராட்சிக்கு செல்லவும் ஒரு பாதை இருந்தது.

5 ஆனால் இடம்பெயர்ந்த வலிகாமம், மற்றும் இடம்பெயராத வடமராட்சி, தென்மராட்சி மக்களுக்கு வன்னிக்கு போக எந்த தரைத்தொடர்பும் இல்லை. இருந்தது கிளாலி மூலமான கடற்பாதை மட்டும் தான். அது கூட இரண்டு (ஆனையிறவு, பூனகரி )பக்கமும் இராணுவ முகாம்களை கொண்டு உயிரை கையில் பிடித்து செல்ல வேண்டிய பயணம்.

6. மக்களை கிளாலியில் இருந்து பூனகரிக்கு அழைத்து செல்ல இருந்தவை மீன் பிடி படகுகள், பெரும் கப்பல்கள் அல்ல. அவற்றில் 10 பேர் கூட ஒரு நேரத்தில் போக முடியாது.

7. இருந்த போதும் 2-3 லட்சம் வரையான மக்கள் அந்த பாதையூடு வன்னி போய் சேர்ந்தார்கள்
8. எதிர்ப்பற்று இராணுவம் வந்த வேகமும், போதுமான பயண வசதியின்மையும், தான் மக்கள் வன்னி செல்ல முடியாது போனதுக்கு முக்கிய கரணங்கள்.

9. மக்கள் அந்த சூழ்னிலையில் வேறு தெரிவற்ற நிலை மற்றையது வன்னி எனும் பரிச்சயமற்ற நிலப்பகுதிக்கு செல்வதில் இருந்த தயக்கம்.

இவை அனைத்தும் ஒரு சராசரி மனிதருக்கு புரிய கூடிய விடயங்கள். ஆனால் மெத்த படித்த "மேதி" களுக்கு புரிவதே இல்லை.

நாம் என்ன செய்ய :(

August 27, 2007 at 6:12 PM  
Blogger Vasanthan said...

குணரத்தினத்தாரே,
தென்மராட்சியிலிருந்து மக்கள் வன்னிக்குச் செல்ல இருந்த பாதை என்ன என்பதைச் சொல்ல முடியுமா?
(பஸ் பிடிச்சு ஆனையிறவுக்கால போயிருக்கலாம் எண்டு சொல்லக்கூடிய ஆள்தான் நீர்)

கடல்வழிப்பாதை மட்டும்தான். வன்னி செல்ல கடற்கரையில் கூடிநின்ற மக்கள்மீது MI24 உலங்குவானூர்திகள் தாக்குதல் நடத்தி மக்களைக் கலைத்த சம்பவம் உங்களுக்குத் தெரியுமா?

முழுமக்களும் வன்னிவந்திருப்பர் என்று சொல்ல வரவில்லை. ஆனால் நேரடியான தரைவழிப்பாதை இருந்திருந்தால் அதுதான் நடந்திருக்கும்.

அடுத்து, யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது 2002இல். நீங்கள் சொல்வதுபோல் 2004 இல் அன்று.

ஆறு கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
1996 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரம் இளைஞர் யுவதிகள் காணாமற்போனது பற்றி நீங்கள் அறியவில்லையா? கிருஷாந்தி, ராஜினி, சாரதாம்பாள் உட்பட ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றது எப்போதாம்? அட செம்மணி மனிதப்புதைகுழி உருவாக்கப்பட்டது எப்போதாம்? தாங்கள் நானூறு தமிழர்களைக் கொன்று புதைத்தோம் என்று சிங்களச் சிப்பாய்களே ஒத்துக்கொண்ட கொடுமை நடந்தது எப்போதாம்?

உடன்படிக்கைக்கு முன்பு புலிகள் யாழ்ப்பாணம் போனதேயில்லையா?
உங்கள் கதையைப் பார்த்தால் ஒப்பந்த நேரத்தில் உள்ளே போன புலிகள்தான் இதுவரை அங்கு நிற்கிறார்கள் என்பது போல் இருக்கிறதே?
ஏதோ ஏ-9 பாதையால்தான் புலிகள் யாழ்ப்பாணத்துக்குப் போகமுடியும் என்பது போன்ற நினைப்பில் கதை விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

August 27, 2007 at 6:49 PM  
Blogger aaru said...

நன்றி குழைக்காட்டான் மற்றும் வசந்தன்.

August 28, 2007 at 4:36 PM  
Anonymous Anonymous said...

மன்னிக்கவும், இரண்டு தினங்களாக உங்கள் தளத்திற்கு நான் வருகை தரவில்லை. எனது சிறிய குறிப்புக்கான 3 பதில்ளையும் படித்தேன்.

யுத்தநிறுத்தம் 2004 ஆண்டெனக் குறிப்பிட்டது தவறுதான். இந்தத்தவறு எப்படி நேர்ந்ததென்றும் எனக்குத் தெரியவில்லை. எப்படியோ தவறு தவறுதான். ஆனால் இந்த ஒரு சிறிய தவறுக்காக நான் ஏதோ இலங்கை, யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி ஒழுங்கைகள் தெரியாதவனாக நக்கலடிக்க வேண்டாம், பெருந்தகைகளே.

ரணில் பிரதமரானவுடன் 2001 டிசம்பரில் புலிகள் ஒருதலைப் பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்தார்கள், 2002 பெப்ரவரியில் ரணில் அரசாங்கமும் புலிகளும் உத்தியோக பூர்வமாக யுத்தநிறுத்தம் செய்துகொண்டார்கள்.

1995 இல் இலங்கை இராணுவம் யாழ்குடாநாட்டைப்பிடித்தவுடன் 600 பேர்கள் காணாமல் போனது, பின்னர் கிருசாந்தி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் உலகம் அறிந்ததே. இலங்கை இராணுவம் இதற்கு முன்னரும் 1958 இலிருந்து இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது, இப்போதும் ஈடுபட்டுவருகின்றது.

இலங்கை இராணுவம் மட்டுமா தமிழர்களை இவ்வாறு கொடுமைப்படுத்தி வருகின்றார்கள்? இலங்கை இராணுவம் அல்லது சிங்களவர்கள் மட்டுமா தமிழ் பெண்களை கற்பழித்தார்கள்? உண்மையைச் சொல்லுங்கோ.

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் தனது வீட்டு வேலைக்கார தமிழ் சிறுமியை பல தடவைகள் பலாத்காரம் செய்ததையும் உங்கள் தளங்களில் திரும்பத்திரும்ப எழுதுங்கோ. அதென்ன சிங்களவர்கள் செய்யதவற்றை இலட்சம் தரம் திருப்பி திருப்பிச் சொல்கிறீர்கள், தமிழர்கள் செய்தவற்றை மெண்டி விழுங்கிவிடுகிறீர்கள்.

புலிகள் பல ஆயிரக்கணக்கான (1986, 1987 களில் ஆரம்பித்து, 1988 – 1995 ஆண்டுகளில் மிகவும் மோசமாகவும், 2002 யுத்தநிறுத்தத்தின் பின்னர் இன்னமும் தொடர்ந்து…) தமிழர்களை பகிரங்கமாக கொலை செய்தும், மேலும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களை கைதுசெய்து இதுவரையில் விடுவிக்காமலும் உள்ளனர்.

புலிகளும் தாங்களும் மக்களோடு மக்களாக ஓடுவதற்காக ‘ஆமி வருகிறான் ஓடுங்கோ’ என யாழ்குடாநாட்டில் ஒலிபெருக்கியில் கூறினார்கள். இல்லையில்லை அப்படிச் சொல்லப்படாது, அவ்வாறு ஒலிபெருக்கியில் கூறுவதற்கு யாழ்ப்பாணத்தில் புலிகள் இருந்தார்கள். ஆனால் சாவகச்சேரியில் நிலைமை அப்படியிருக்கவில்லை. சாவகச்சேரிக்கு இலங்கை இராணுவம் வருவதற்கு முன்னரே புலிகள் வன்னிக்கு ஓடித்தப்பிவிட்டார்கள். எனவே சாவகச்சேரியில் ‘ஆமி வருகிறான் ஓடுங்கோ’ என ஒலிபெருக்கியில் கூறுவதற்கு புலிகள் அங்கு இருக்கவில்லை. இதுதான் உண்மை.

யாழ்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களில் ஒருபகுதியினர் சாவகச்சேரி ஊடாக வன்னி நிலப்பரப்பிற்கு வந்தனர் என்பதை நான் பூரணமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் 1996 ஆண்டளவில் வன்னியைவிட்டு வெளியேறி (இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான) வவுனியா, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

வன்னி நிலப்பரப்பில் தரித்து நிற்கவேண்டி வந்தவர்களில் 95 வீதமானவர்கள் யுத்தநிறுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணம் திருப்பிவிட்டார்கள். ஓமோம் இலங்கை இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குத்தான் திரும்பி வந்தார்கள்.

புலிகள் யாழ்ப்பாணத்தை பிடிப்பதற்கான பாதைகளைத் தேடிக்கொணடிருக்க, நாளுக்குநாள் வன்னி மக்கள் வன்னியிலிருந்து இலங்கை இராணுவகட்டுப்பாட்டு பகுதிகளான வவுனியாவிற்கும் மன்னாருக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

- செ.குணரத்தினம் -

August 29, 2007 at 3:43 PM  
Blogger aaru said...

'ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் 1996 ஆண்டளவில் வன்னியைவிட்டு வெளியேறி (இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான) வவுனியா, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? '

நீங்கள் கூறுவது உண்மை. பணம் இருந்தவர்களும் உறவினர் இருந்தவலர்களும் அப்படிச் செய்தார்கள். எங்களைபோல் சாதரணமக்களால் அங்கெல்லாம் செல்லமுடியாது. மற்றும் சாவகச்சேரியைபோல் வன்னி இல்லை. அதுபோல் வன்னிக்கு செல்லும் பாதைகளிலும் பிரச்சனை. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இடம்பெயர்ந்து கஸ்ரப்பட்ட மக்கள் இன்னுமொருமுறை இடம்பெயர விரும்பவில்லை. நீங்கள் அந்த காலகட்டத்தில் அங்கிருந்தவரா தெரியாது ஆனால் நான் அங்கிருக்கும்பொழுது வீட்டிலுள்ளவர்கள் வன்னிக்குப்போய் கஸ்ரப்படுவதிலும் பார்க்க வீடு திரும்புவதேமேல் என்றுதான் முடிவு எடுத்தார்கள்.

'சாவகச்சேரிக்கு இலங்கை இராணுவம் வருவதற்கு முன்னரே புலிகள் வன்னிக்கு ஓடித்தப்பிவிட்டார்கள். எனவே சாவகச்சேரியில் ‘ஆமி வருகிறான் ஓடுங்கோ’ என ஒலிபெருக்கியில் கூறுவதற்கு புலிகள் அங்கு இருக்கவில்லை. இதுதான் உண்மை.'

நாங்கள் வீடு திரும்பும்போது வழி நெடுகா இயக்கம் நிற்பதை பார்தோம்.

'யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் தனது வீட்டு வேலைக்கார தமிழ் சிறுமியை பல தடவைகள் பலாத்காரம் செய்ததையும் உங்கள் தளங்களில் திரும்பத்திரும்ப எழுதுங்கோ. அதென்ன சிங்களவர்கள் செய்யதவற்றை இலட்சம் தரம் திருப்பி திருப்பிச் சொல்கிறீர்கள், தமிழர்கள் செய்தவற்றை மெண்டி விழுங்கிவிடுகிறீர்கள்.'

தமிழர்கள் செய்யவில்லை என்று நான் செல்லவில்லை. வேலைக்காரி களவு எடுத்துவிட்டாள் என்பதற்காக கையிலே குறிபோட்ட கதையை கூட கேள்விப்பட்டிருக்கின்றேன். எனது நோக்கம் சிங்களவர்களை கெட்டவர்களாக காண்பிப்பது அல்ல. உங்களுக்கு எத்தனை வயது என்பது எனக்கு தெரியாது ஆனால் எனது சிறு வயது முழுக்க யுத்த பூமியிலேயே இருந்துவிட்டேன் ஆதலால் எனது கோபம் உங்களுக்கு புரியவாய்ப்பில்லை. நான் மட்டுமில்லை ஈழத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் யுத்தத்தினோடுதான் தங்களது சிறு வயதை கழிக்கன்றார்கள். 'ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் 1996 ஆண்டளவில் வன்னியைவிட்டு வெளியேறி (இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான) வவுனியா, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? '

நீங்கள் கூறுவது உண்மை. பணம் இருந்தவர்களும் உறவினர் இருந்தவலர்களும் அப்படிச் செய்தார்கள். எங்களைபோல் சாதரணமக்களால் அங்கெல்லாம் செல்லமுடியாது. மற்றும் சாவகச்சேரியைபோல் வன்னி இல்லை. அதுபோல் வன்னிக்கு செல்லும் பாதைகளிலும் பிரச்சனை. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இடம்பெயர்ந்து கஸ்ரப்பட்ட மக்கள் இன்னுமொருமுறை இடம்பெயர விரும்பவில்லை. நீங்கள் அந்த காலகட்டத்தில் அங்கிருந்தவரா தெரியாது ஆனால் நான் அங்கிருக்கும்பொழுது வீட்டிலுள்ளவர்கள் வன்னிக்குப்போய் கஸ்ரப்படுவதிலும் பார்க்க வீடு திரும்புவதேமேல் என்றுதான் முடிவு எடுத்தார்கள்.

'சாவகச்சேரிக்கு இலங்கை இராணுவம் வருவதற்கு முன்னரே புலிகள் வன்னிக்கு ஓடித்தப்பிவிட்டார்கள். எனவே சாவகச்சேரியில் ‘ஆமி வருகிறான் ஓடுங்கோ’ என ஒலிபெருக்கியில் கூறுவதற்கு புலிகள் அங்கு இருக்கவில்லை. இதுதான் உண்மை.'

நாங்கள் வீடு திரும்பும்போது வழி நெடுக இயக்கம் நிற்பதை பார்தோம்.

'யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் தனது வீட்டு வேலைக்கார தமிழ் சிறுமியை பல தடவைகள் பலாத்காரம் செய்ததையும் உங்கள் தளங்களில் திரும்பத்திரும்ப எழுதுங்கோ. அதென்ன சிங்களவர்கள் செய்யதவற்றை இலட்சம் தரம் திருப்பி திருப்பிச் சொல்கிறீர்கள், தமிழர்கள் செய்தவற்றை மெண்டி விழுங்கிவிடுகிறீர்கள்.'

தமிழர்கள் செய்யவில்லை என்று நான் செல்லவில்லை. வேலைக்காரி களவு எடுத்துவிட்டாள் என்பதற்காக கையிலே குறிபோட்ட கதையை கூட கேள்விப்பட்டிருக்கின்றேன். எனது நோக்கம் சிங்களவர்களை கெட்டவர்களாக காண்பிப்பது அல்ல. உங்களுக்கு எத்தனை வயது என்பது எனக்கு தெரியாது ஆனால் எனது சிறு வயது முழுக்க யுத்த பூமியிலேயே இருந்துவிட்டேன் ஆதலால் எனது கோபம் உங்களுக்கு புரியவாய்ப்பில்லை. நான் மட்டுமில்லை ஈழத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் யுத்தத்தினோடுதான் தல்களது சிறு வயதை கழிக்கன்றார்கள். சிங்களத்தலைமை இந்த பிரச்சனையை எப்போதோ முடித்திருக்கலாம், ஆனால் அரசியல் லாபங்களுக்காக அவர்கள் எங்களின் வாழ்கையில் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

August 29, 2007 at 5:31 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home