Tuesday, September 25, 2007

குடியுருமை

குடியுருமை என்றவுடன் ஞாபகம் வருவது நாங்கள் வாழ்ந்து வரும் நாடு அல்லது
எமது தாய் நாடு. இந்த வட்டத்திற்குமேல் ஒருவரும் குடியுருமையை பற்றி
யோசிப்பதில்லை அதற்கு அதிக காரணமும் இல்லை. சற்றே யோசித்துப்பார்த்தால்
உலகத்தில் உள்ள அதிக பிரச்சனைகளுக்கு இந்த குடியுருமைதான் காரணம்.
ஈழத்தில் தமிழ் மக்களுக்கு சம குடியுருமை கொடுத்திருந்தால் ஈழப்போராட்டமே
நடக்காது இன்னும் உலகத்தில் பல பிரச்சனைகள் நடந்திருக்காது மற்றும்
நடக்காமலிருக்கும்.

சற்றே தொலைநோக்கு பார்வையுடன் பார்த்தால் இந்தக் குடியுருமை பிரச்சனை
வேகமாக தீர்கப்படவேண்டிய விடயம் என்று புலப்படும். உலகத்திலுள்ள அனைவரும் ஓரே குடியுருமை வைத்திருந்தால் பல பிரச்சனைகளை தீர்க்கப்படும். ஓவ்வொரு நாடும் சுயநலத்துடன் செயல்படுவதனால்தான் பிரச்சனை. ஆனால் நாம்
எதிர்காலத்தில் எமது நாடு என்ற சிறு வட்டத்திலிருந்து எமது பூமி என்ற
பரந்த வட்டத்திற்கு வரவேண்டும், அப்படி வந்தால்தான் மனிதர்கள் இந்த
பூமியிலிருந்து அழிந்து போகாமல் இருக்கமுடியும். மனித இனம்
கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கின்றது, ஆகையால் நாம்
அழிந்துபோகாமல் இருப்பதற்கு விஞ்ஞானத்தை நம்பவேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுருக்கின்றோம். நான் சொல்லுவது எமது வாழ்க்கை தரத்தை
உயர்த்துவது மட்டுமல்ல ஏன்னென்றால் உலகத்தின் மக்கள் தொகை 6 பில்லியனை
தாண்டிவிட்டது ஆகையால் நாம் வசிப்பதற்கு வேறு இடங்களை பார்க்க
நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.

வேறு இடங்கள் என்று குறிப்பிட்டது வேற்று கிரகங்களயாகும். இது கேட்பதற்கு விநோதாமாக தெரியலாம் ஆனால் இதுதான் நிஜம் ஏனென்றால் பூமியால் மக்களை தாங்கமுடியாமல்போகும் காலம் வெகுதூரத்திலில்லை. ஏற்கனவே பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது, இதன் காரணமாக பனிக்கட்டிகள் கரைந்து கொண்டிருக்கின்றன. பல நகரங்கள் தண்ணீருக்கள் முழ்கும் அபாயத்தில் உள்ளன. மனித இனம் கடந்த 30,000 வருடங்களுக்குமேலாக முன்னேறவில்லை. இதன்படி பார்த்தால் மனிதர்களால் புதிய சுழ்நிலைக்கு வேகமாக மாறமுடியாது. ஆகையால் வேற்று கிரகங்களை நாடிபோகவேண்டிய கட்டாயத்திலுள்ளோம். இதற்கரிய வேலைகளில் விஞ்ஞானைகளும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்களும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். பிரச்சனை என்னவென்றால், ஓவ்வொரு நாடும் தன்னந்தனியாக ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றன, இதன்காரணமாக ஆராய்ச்சி வேகமாக செல்லமுடியாமல் இருக்கின்றது. இந்த secrecyக்கு முக்கிய காரணம், ஓவ்வொரு நாடும் தான்தான் எல்லாவற்றிலும் முதலிடத்திலிருக்கவேண்டும் என்ற சுயநலம். இதன் காரணமகத்தான் ஓவ்வொரு நாடும் சந்திர மண்டலத்திற்கு செல்லவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்று நிற்கின்றன. இதன்காரணமாக ஏராளமான பணம் விரயமாகின்றது. ஆனால் பூமியில் ஓரு மத்திய அரசாங்கம் இருக்குமானால் விஞ்ஞானம் மிக வேகமாக வளரும், இது மட்டுமல்ல ஓரு மத்திய அரசாங்கம் இருந்தால் எந்தப் பிரச்சனையையும் பேசி தீர்ப்பதற்கு ஓரு மேடையை அதனால் உருவாக்கமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபையை ஓரு எடுத்துக்காட்டாக பார்க்கலமேஓழிய அதை நிச்சயமாக பின்பற்றக்கூடாது. எல்லா நாடுகளுடைய தேவைகளையும் பிரதிபலிக்கக்கூடியதாக அமையவேண்டும். இப்பொழுதுள்ள நிலமையில் இது சாத்தியப்படாத ஓன்றாக தெரிந்தாலும், நாட்டு மக்களுக்கும் பதவியிலுள்ளவர்களுக்கும் தொலைநோக்கு பார்வையுட்ன் செயல்பட்டால் இது நிச்சயமானது.

நன்றி
ஆறு

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home