Friday, November 2, 2007

மீளாத்துயில் கொள்ளும் அண்ணன்களுக்கு ஒர் சமானியனின் வீரவணக்கம்

ஈழத்தமிழர்கள் அனைவரும் ஓரு துன்பச் செய்தியை கேட்டுக்கொண்டே வேலைக்குச் சென்றோம். பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் இன்று காலை 6 மணிக்கு வீரச்சாவை தழுவிக்கொண்டார். அவருடன் பல வீரர்களையும் இன்று இழந்துவிட்டோம். இவர்களுடைய இழப்பு புலிகளுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் அனைவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. நான் இவரை நேரில் சந்தக்காவிட்டாலும் 90 நடுப்பகுதிகளில் கே.கே.ஸ் றோட்டில் அவருடைய கறுப்பு பயிரொவில் போவதை பார்த்திருக்கிறேன், அப்பொழுது அவர் அரசியல் பொறுப்பாளர் என்று மட்டும் தெரியும் அனால் அவர் எவ்வளவு பெரியவர் என்று பின்னர்தான் தெரியும். எப்ப கே.கே.ஸ் றோட்டால் சென்றாலும் சிரித்த முகத்துடன்தான் கண்ட ஞாபகம். எங்களுக்கு எப்பவும் கைகாட்டிக்கொண்டுதான் செல்வார். அப்பொழுது எனக்கு 8-10 வயது தான், அதனால் கைகாட்டிவிட்டுச் சென்றஅடுத்தநாள் பள்ளிக்கூடம்சென்று தமிழ்செல்வன் என்னைமட்டும் பார்த்து கைகாட்டிவிட்டுச் சென்றதாக நண்பர்களிடம் சொல்லி மகிழ்வதுண்டு. அவர் யாரைப் பார்த்து கைகாட்டினார் என்று சண்டைபோட்டிருக்கின்றோம். அந்த கால கட்டத்தில் பிரபாகரனுக்குப்பிறகு தெரிந்தவர் என்றால் அவர் மட்டுமே. இன்று அவர் இறந்த செய்தி கேட்டதுக் என்னையறியாமலே கண்ணீர் வந்துவிட்டது. கடந்த பத்து வருடத்திலே நான் அழுதது இரண்டுமுறைதான். இன்று ஒன்று மற்றயது முன்று மாதத்திற்கு முன்னர் எனது நண்பனை கூலிப்படைகள் அவனது வீட்டுக்கு முன்வைத்து கொன்றபோது.

நாங்கள் ஓன்றை மட்டும் மறக்கக்கூடாது, சிங்கள வான்படையால் இவர் சாகவில்லை, ஓரு துரோகி இவரது இடத்தை காட்டிக்கொடுத்ததால்தான் இவர் மற்றும் சக போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு என்னிடம் ஆணித்தரமான ஆதாரம் இல்லை ஆனால் இவரின் இடத்தை யராவது காட்டிக்கொடுத்திருந்தால் மட்டுமே சிங்களப்படையால் குண்டு போட்டிருக்கமுடியுமே. இதைவைத்துக்கொண்டு சிங்களவர்கள் தாங்கள் இன்னமும் பலத்துடன் இருப்பதுபோல்காட்ட முயற்சிப்பார்கள், அனால் எல்லாளன் நடவடிக்கையோடு அவர்களது வான்படை துப்பற்றுப்போய்விட்டது. தமிழ்செல்வன் என்ற மாவீரன் ஓரு துரோகியால்தான் கொல்லப்பட்டார்.

இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும். அனால் எனது அவா என்னவென்றால் சிறிதாக கொடுக்காமல் யாழ் குடாவில் முடங்கியுள்ள படையினரை அடித்தால்தான் திருந்துவர். யாழ் குடாவில் உள்ள படையினர் அனைவரும் அடிக்கின்ற அடியில் கொழும்புக்கு கப்பலிலல்ல பெட்டிகளில்தான் செல்லவேண்டும். எனக்கும் தெரியும் ஓருஉயிர் எவ்வளவு உன்னதமானது என்று அனால் யுத்தம் முடியவேண்டுமேன்றால் சிங்களவர்களுக்கும் அதன் கொடுரம் தெரியவேண்டும். நானும் எனது தாகப்பனார் உட்பட பலரை இழந்திருக்கின்றேன் அனால் யுத்தத்தின் வலி அவர்களுக்கும் தெரியவேண்டும். இனி அடிக்கின்ற அடியில் அவர்கள் ஓருபோதும் எழுந்திருக்கக்கூடாது, அப்பொழுதுதான் தெரியும் தமிழன் என்றால் யாரெண்டு.

எமக்காக, எம் சந்ததிக்காக உயிரைவிட்ட இவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?

தமிழிழம் மலரும் அதுவரை இவர்கள் கொஞ்சம் உறங்கட்டும்.

நன்றி
ஆறு

Labels: ,

2 Comments:

Blogger aaru said...

மன்னிக்கவேண்டும் அனானி, உங்களது பின்னூட்டத்தை என்னால் பிரசுரிக்கமுடியாது. நீங்கள் எனக்கு அனுப்பியது வெறும் வெப் அட்ரஸ் மட்டுமே. அதில் எழுதப்பட்டிருந்த செய்திகளுடன் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் அதை எழுதியிருந்தால் அதை நிச்சயமாக பிரசுரித்திருப்பேன்.

புலி எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பது புலிகளையா அல்லது தமிழிழத்தையா?

November 2, 2007 at 2:05 PM  
Anonymous Anonymous said...

sandaiyinna ithellaam sagajamappa(
it is normal in war)...

November 2, 2007 at 7:46 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home